Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

மறுகட்டுமானத்தில் புதிதாக 12,648 வீடுகள் கட்டப்படும்: அமைச்சர் ராஜகுமார்

மறுகட்டுமானத்தில் புதிதாக 12,648 வீடுகள் கட்டப்படும்: அமைச்சர் ராஜகுமார்
பயனாளிகளுக்கு குடியிருப்பு ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கிய அமைச்சர் ராஜ்குமார்.

அமைச்சர் ராஜ்குமார் தகவல்

பகிரவும் WhatsApp Facebook

தமிழகத்தில் நடப்பாண்டில் மறுகட்டுமான திட்டத்தில், 20 திட்டப்பகுதிகளில் ரூ.2,882.62 கோடியில் 12,648 புதிய குடியிருப்புகள் கட்டப்படுவதாக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் தலைமை அலுவலகத்தில் நடந்த விழாவில், 195 பயனாளிகளுக்குக் குடியிருப்பு ஒதுக்கீட்டு ஆணைகளை அமைச்சர் ராஜ்குமார் வழங்கினார். பின் அவர் கூறியதாவது: 

"சென்னையில் பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டுப் பழுதடைந்துள்ள குடியிருப்புகளை மக்கள் காலி செய்து பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

நடப்பாண்டில் மறுகட்டுமானத் திட்டத்தில், 20 திட்டப்பகுதிகளில் ரூ.2,882.62 கோடியில் 12,648 புதிய குடியிருப்புகள் தமிழகம் முழுவதும் புதிதாகக் கட்டப்பட உள்ளன. இத்துடன், அடுக்குமாடிக் குடியிருப்புகளில் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.264 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ளும் வகையில், குடியிருப்புகளில் தேங்கியுள்ள திடக்கழிவுகளை அகற்றி, கழிவுநீர் அடைப்புகள் ஏற்படாமல் தடுக்கவும், வெள்ளநீரை வெளியேற்ற பம்புசெட்டுகளை தயார் நிலையில் வைக்கவும் அனைத்துத் துறை அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இவை தவிர, சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் உள்ள 36,395 பழைய குடியிருப்புகளைப் புனரமைக்க ‘அயோத்திதாச பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டத்தில், ரூ.46 கோடியும், கண்ணகி நகரில் உள்ள 6,508 குடியிருப்புகளின் பழுதுபார்ப்புப் பணிகளுக்கு ரூ.50 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

முந்தைய செய்தி
புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான்
அடுத்த செய்தி
ஜப்பான் நிறுவனத்தின் அகழாய்வு இயந்திரங்கள் அறிமுகம்

தொடர்புடைய செய்திகள்